தங்கும் விடுதியில் தஞ்சம் அடைந்த கவுன்சிலர்கள்...!


தங்கும் விடுதியில் தஞ்சம் அடைந்த கவுன்சிலர்கள்...!
x
தினத்தந்தி 3 March 2022 2:29 PM IST (Updated: 3 March 2022 2:31 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கவுன்சிலர்கள் தங்கும் விடுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஏற்காடு,

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு நேற்று பதிவியேற்று விழா நடைபெற்றது.

தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற பல கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பதிவியேற்றுக் கொண்டனர். அந்த வகையில் திசையன்விளையில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த கவுன்சிலர்கள் ஹெல்மெட்  அணிந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

தமிழகத்தில் நாளை மேயர் பதிவிக்கான முறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தங்கள் கட்சி ஆதரவு கவுன்சிலர்களை பாதுகாப்பதற்காக அரசியல் கட்சிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுற்றுலா தலமான ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு வரும் கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  அங்கு உள்ள சில தங்கும் விடுதிகளில் கவுன்சிலர்களை தங்க வைத்து அரசியல் கட்சியினர் பாதுகாத்து வருகின்றனர்.  

மேலும் அவர்களுக்கு உயர் தர உணவுகள் வழங்கி அரசியல் கட்சியினர் உபசரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Next Story