தமிழகத்தில் சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் : பதிவுத்துறை

தமிழகத்தில் சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும். கடன்பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவினை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பர். தொழில் முனைவோரின் நிலையும் இதுவே.
ஆனால் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவிற்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு அதிகரித்துள்ள ஆவணப்பதிவுகளுக்கு ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்களில் தமிழ்நாடு பதிவுச் சட்ட விதி 4-ல் கண்ட ‘சிறப்பு அவசரநிலை’ அடிப்படையில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூ.200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story