சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம்
444 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் என தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்டுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் என தெரிவித்துள்ளது.
இதற்கான தமிழ் தகுதி தேர்வு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் என தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story