ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து கல்வித்துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை
ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து கல்வித்துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை
புதுச்சேரி
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதனிடையே பள்ளிகளில் பாடங்களை நடத்தி முடிக்கும் பணியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இதனால் தங்களால் பாடங்களை படிக்க முடியவில்லை என்று கூறி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து உருளையன்பேட்டை போலீசார் அவர்களை கல்வித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். அப்போது அதிகாரிகள், முதலில் பள்ளிக்கு செல்லுங்கள். அங்கு நாங்களே வந்து உங்களை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்கிறோம் என்று அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
Related Tags :
Next Story