மாநகராட்சி மேயர், நகராட்சி - பேரூராட்சி தலைவர் தேர்தல் துவங்கியது
தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி - பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் தொடங்கியது.
சென்னை,
தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி - பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் துவங்கியது. இதில் 21 மேயர்கள் - துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள் - துணைத்தலைவர்கள், 490 பேரூராட்சி தலைவர்கள் - துணை தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களாக தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
போட்டி இருந்தால் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Related Tags :
Next Story