ஆவடி மாநகராட்சி மேயராக உதயகுமார் பதவியேற்பு..
ஆவடி மாநகராட்சியின் மேயராக உதயகுமார் பதிவியேற்றுக் கொண்டார்.
சென்னை,
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 43 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.
தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் மற்றும் ஒரு சுயேச்சை ஆகிய 3 பேரும் தி.மு..க.வில் இணைந்ததால் தி.மு.க.வின் பலம் 46 ஆனது. இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது.
ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனத்தை சேர்ந்த பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தி.மு.க. 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயகுமார், ஆவடி மாநகராட்சி் மேயர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அந்த வகையில் தமிழகத்தில் மேயர் பதிவிக்கான முறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் பதிவியேற்று கொண்டர்.
இது போன்று ஒவ்வொரு மாநகராட்சியிலும் வெற்றிபெற்ற மேயர்கள் பதிவியேற்றுக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் திமுக சார்பில் போாட்டியிட்ட உதயகுமார் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து ஆவடி மாநகராட்சி மேயராக உதயகுமார் பெறுப்பேற்றுக் கொண்டார்.
Related Tags :
Next Story