திமுக கூட்டணியில், போட்டி வேட்பாளர்கள் வெற்றி குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
திமுக கூட்டணியில், போட்டி வேட்பாளர்கள் வெற்றி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 22-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில், போட்டி வேட்பாளர்கள் வெற்றி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story