ஒரே ஒருவருக்கு மட்டும் தொற்று பாதிப்பு புதுச்சேரியில் கொரோனா வீழ்ந்தது
புதுச்சேரியில் ஒரே ஒருவர் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் ஒரே ஒருவர் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
3-வது அலை
புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். பலியும் அதிகமாக இருந்தது. அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வருகிறது. இன்று ஒருவர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டார். அதாவது புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 497 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒருவருக்கு மட்டும் பாதிப்பு
அவர்களில் ஒரே ஒருவருக்கு மட்டும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 5 பேர், வீடுகளில் 47 பேர் என 52 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 23 பேர் குணமடைந்தனர்.
புதுச்சேரியில் ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கொரோனாவின் வீழ்ச்சியை காட்டுகிறது. இன்னும் சில நாட்களில் தொற்று இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறும் என்று கூறப்படுகிறது.
புதுவையில் தொற்று பரவல் 0.20 சதவீதமாகவும், குணமடைவது 98.78 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன் தினம் முதல் தவணை தடுப்பூசியை 91 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 631 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 44 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 94 ஆயிரத்து 726 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story