டாக்டர் வீட்டில் நகை திருடிய உறவினர் கைது


டாக்டர் வீட்டில் நகை திருடிய உறவினர் கைது
x
தினத்தந்தி 4 March 2022 8:51 PM IST (Updated: 4 March 2022 8:51 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் டாக்டர் வீட்டில் நகை திருடிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி
புதுவையில் டாக்டர் வீட்டில் நகை திருடிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

நகை திருட்டு

புதுவை சவரிராயலு வீதியை சேர்ந்தவர் தருண்ராஜ் (வயது 35). தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் இவரது வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகைகள் மாயமானது. இதுதொடர்பான புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
டாக்டர் தருண்ராஜின் வீட்டில் அவரது உறவினரான திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்துள்ளார். அவர் மீதும் சந்தேகம் இருப்பதாக டாக்டர் தருண்ராஜ் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

உறவினர் கைது

இதைத்தொடர்ந்து வெங்கடேசை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் நகையை திருடியது உறுதியானது.
இதைத்தொடர்ந்து வெங்கடேசை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து திருட்டு போன நகைகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story