புதுச்சேரியில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
புதுவை கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
புதுவை கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த கடல் காற்று வீசும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதன்படி நேற்று புதுச்சேரியில் பலத்த கடல்காற்று வீசியது. புதுவை கடல் பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்துவந்தன. இதன் காரணமாக கடற்கரை பகுதியில் ஏற்கனவே உருவாகியிருந்த செயற்கை மணல் பரப்பானது காணாமல் போனது. அலையின் சீற்றத்தை கடற்கரைக்கு வந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
திடீர் மழை
நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பகல் 11.30 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. பின்னர் வானம் மேகமூட்டமாக இருந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது படகுகள் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திலும், கடற்கரைகளிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
Related Tags :
Next Story