நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு...!
நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பூதலூர்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள களர்பட்டி பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . இந்த பகுதிகளில் உள்ள வயல்களில் அறுவடை பணிக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறுவடை எந்திரங்கள் கொண்டு வந்து அறுவடை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் களர்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் வயலில் புதுக்கோட்டை மாவட்டம் மாங்கொல்லை கீழப்பட்டியை சேர்ந்த கார்த்தி (வயது 30) என்பவர் அறுவடை எந்திரத்தின் மூலம் அறுவடை பணிகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அறுவடை எந்திரத்தில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக கார்த்தி அறுவடை எந்திரத்தின் மேல் ஏறி பெல்ட்டை சரி செய்ய முயன்று உள்ளார். அப்போது கார்திக்கின் கழுத்து பெல்டில் சிக்கி இறுக்கி உள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், அறுவடை எந்திரத்தில் சிக்கி இருந்த கார்த்திக்கை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story