புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? டிடிவி தினகரன் கேள்வி
எல்லாவற்றையும் போல மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவில் உள்ள விவரம் வருமாறு:-
‘மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தமாட்டோம்’ என்று கூறி வந்த தி.மு.க. அரசு, தற்போது அந்த கல்விக்கொள்கைப்படி 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்திருப்பது ஏன்?.
எல்லாவற்றையும் போல இதிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறதா?. மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இந்த பிரச்சினையில், நீட் தேர்வு விவகாரத்தைப்போல தி.மு.க. அரசு நாடகமாடக்கூடாது. புதிய கல்விக்கொள்கை குறித்த தி.மு.க. அரசின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story