இரவலாக வாங்கிய காரை அடமானம் வைத்து நூதன மோசடி


இரவலாக வாங்கிய காரை அடமானம் வைத்து நூதன மோசடி
x
தினத்தந்தி 5 March 2022 11:42 PM IST (Updated: 5 March 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

இரவலாக வாங்கிய காரை அடமானம் வைத்து நூதனமாக மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இரவலாக வாங்கிய காரை அடமானம் வைத்து நூதனமாக மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
காரை திருப்பிதரவில்லை
புதுவை கருவடிக்குப்பம் இடையஞ்சாவடி ரோட்டை சேர்ந்தவர் தமிழரசன். இவரது குடும்ப நண்பர் அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 65) ஆவார். இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் செய்துவரும் ஜெயலட்சுமி தமிழரசனின் காரை  தனது சொந்த உபயோகத்துக்காக இரவலாக கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த டிரைவர் சிவா என்பவர் தமிழரசனின் மாமா வீட்டில் நின்றிருந்த காரை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் காரை திருப்பி கொடுக்கவில்லை.
மோசடி வழக்கு
தமிழரசன் பலமுறை கேட்டும் காரை ஒப்படைக்கவில்லை. அவரது தொடர் விசாரணையில் சேலத்தை சேர்ந்த சீனுவாசன், ஈரோட்டை சேர்ந்த திருவேங்கடம் ஆகியோரிடம் காரை அடமானம் வைத்து பணம் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரை கேட்டபோது அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் மோசடி செய்வதை உணர்ந்த தமிழரசன் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இரவலாக வாங்கிய காரை அடமானம் வைத்து நூதன மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story