ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை


ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 6 March 2022 12:30 PM IST (Updated: 6 March 2022 12:30 PM IST)
t-max-icont-min-icon

ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்,

சைவ சமயங்களில் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவில். இந்த கோவில் ஆழித்தேர் வரலாற்று சிறப்புமிக்கது. பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 

இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவம், சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. வருகிற 15-ந்தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது.

இந்த நிலையில்,  தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேரோட்ட விழாவை முன்னிட்டு ஆழித்தேருடன், விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களின் கூரைகள் பிரிக்கப்பட்டு அலங்கரிக்கும் பணி தொடங்கியது. அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடி, மொத்த எடை 300 டன் ஆகும்.

திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில், சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.

Next Story