பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு...!


பழுதாகி  நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 6 March 2022 2:12 PM IST (Updated: 6 March 2022 2:12 PM IST)
t-max-icont-min-icon

பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கயத்தாறு,

நாகர்கோவிலில் இருந்து ரப்பர் மற்றும் தென்னை நாறுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி கயத்தாறு அருகே வந்தபோது சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் பின்னால் மோதி உள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து லாரியை டிரைவர் சாலையோரமாக நிறுத்தி உள்ளார்.

இந்த விபத்தை கண்ட மற்றொரு லாரி டிரைவர் முருகன் என்பவர் தனது லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு விபத்துக்குள்ளன தனது கம்பெனி லாரியை பார்க்க கிளீனர் கென்னடியுடன் சென்று உள்ளார்.

அப்போது கேரளாவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு பலா பழங்கள் ஏற்றிகொண்டு வந்த ஈச்சர் லாரி சாலையோரம் நின்ற லாரியின் மீது மோதி உள்ளது.

இந்த விபத்தில் லாரியை பார்க்க வந்த முருகன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். கிளீனர் கென்னடி உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பலா பழங்கள் ஏற்றி வந்த லாரியன் டிரைவர் மற்றும் கிளீனரும் பலத்த காயம்  அடைந்துள்ளனர். தற்போது இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Next Story