முகநூல் காதல்: பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது..!
வாணியம்பாடி அருகே பள்ளி மாணவியை முகநூலில் காதலித்து, கடத்திய காலணி தொழிற்சாலை தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
திருப்பத்தூர்,
வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அங்குள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிரார். கடந்த 3 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. அந்த பெண் தன்னுடைய செல்போனில் உள்ள முகநூலில் பதிவாகி இருந்த குருஞ்செய்திகள் குறித்த தகவல்களுடன் பெண்ணை காணவில்லை என்று வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற போலீசார் செல்போன் மூலம் விவரங்களை சேகரித்து அந்த மாணவியை தேடிவந்தனர். விசாரணையில் மாதனுர் பகுதியை சேர்ந்த காலணி தொழிற்சாலை தொழிலாளி ருத்ரகுமார் (23) என்பவர் அந்த பள்ளி மாணவியுடன் முகநூல் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலிசார் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். அப்போது அந்த இளைஞர் மாணவியுடன் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் என்ற இடத்தில் பதுங்கியிருந்ததாக கிடைத்த தகவலின் படி போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அந்த மாணவியிடம் முகநூலில் நட்பாக பழகி காதலித்து, ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இளைஞரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story