கரூர்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி


கரூர்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
x
தினத்தந்தி 6 March 2022 6:27 PM IST (Updated: 6 March 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூர்,

கரூர் மாவட்டம் புகளூர் அருகே மேத்யூ நகர் பகுதியை சேர்ந்தவர் மலையாளன் (67). இவர் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பிட்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து தளவாபாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த கரூர் வெங்கமேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாயவன்(39) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்து மலையாளன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். 

இதில் மலையாளனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மலையாளன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாயனுக்கு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய மாயவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story