கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் மறைவு; முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்
உடல்நலக் குறைவு காரணமாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹைதர் அலி சிஹாப் இன்று உயிரிழந்தார்.
சென்னை,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கேரள மாநிலத் தலைவர் ஹைதர் அலி சிஹாப் தங்கள். இவர் உடல்நலக் குறைவு காரணமாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
அவரது இறுதிச்சடங்கு மலப்புரம் மாவட்டம் பாணக்காட்டில் நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவரது மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி சிஹாப் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனைக்குள்ளானேன்.
இந்திய நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், சிறுபான்மைச் சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து பாடுபட்டு வந்த அவரது மறைவு பேரிழப்பாகும்.
அனைவரிடத்திலும் மாறாத அன்பு செலுத்தும் செய்யது ஹைதர் அலி சிஹாப் அவர்களை இழந்து வாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story