சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது எதிர்பாராத ஒன்று. வெற்றியை காண கலைஞர் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், அவரது சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி.
கடமை கண்ணியம், கட்டுப்பாட்டை திமுகவினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம்.
தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணி கட்சிகளை திருப்தி செய்வதற்காக மட்டும் எச்சரிக்கவில்லை. திருந்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். மேயர் என்பது பதவி அல்ல. பொறுப்பு என கருணாநிதி சுட்டிக்காட்டினார். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்ற வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story