தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதியது 5 கார்கள் சேதம்
காரைக்கால் பைபாஸ் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் நின்ற 5 கார்கள் மீது மோதியது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
காரைக்கால் பைபாஸ் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் நின்ற 5 கார்கள் மீது மோதியது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
அதிவேகமாக சென்ற கார்
காரைக்கால் அரசு மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் டாக்டர் மதன்பாபு. இவர் காரைக்கால் கோவில்பத்து காவலன் நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் நிகில்பாபு (வயது 21).
நேற்று அரசு விளையாட்டுத்திடல் உள்ள பைபாஸ் சாலையில், நிகில்பாபு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள தனியார் கார் மெக்கானிக் சென்டர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரம் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைத்திருந்த 5 கார்கள் மீது அடுத்தடுத்து மோதி நின்றது. இந்த தொடர் விபத்தில் 5 கார்கள் சேதமடைந்தன. மேலும் விபத்து ஏற்படுத்திய காரும் சேதமடைந்தது.
வாலிபர் காயம்
இதுபற்றி தகவல் அறிந்த கார் மெக்கானிக் மைய உரிமையாளர் கண்ணன் அங்கு வந்து பார்த்தார். அப்போது விபத்து ஏற்படுத்திய காரில் காயங்களுடன் நிகில்பாபு மற்றும் ஒரு நாய்குட்டி இருந்தது. நிகில்பாபு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story