உப்பளங்கள் நீரில் மூழ்கின


உப்பளங்கள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 6 March 2022 11:41 PM IST (Updated: 6 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றத்தால் முகத்துவாரம் வழியாக கடல் நீர் புகுந்ததில் 3ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கடல் சீற்றத்தால் முகத்துவாரம் வழியாக கடல் நீர் புகுந்ததில் 3ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
உப்பு உற்பத்தி
தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது மரக்காணம். இங்கு ஆண்டு தோறும் சுமார் 10 லட்சம் டன்னுக்கு மேலாக உப்பு உற்பத்தி செய்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
 இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா மற்றும் பருவமழை போன்ற பாதிப்பால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. உப்பு உற்பத்தியும்  நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது உப்பு உற்பத்திக்கு ஏற்ற சூழலால் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கி விறு விறுப்பாக நடந்துவந்தது.
கடல் சீற்றத்தால் பாதிப்பு
உப்பு உற்பத்தியாகி வரும் இந்த சமயத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக மரக்காணம் கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் முகத்துவாரம் வழியாக கடல் நீர் உட்புகுந்து 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்  இருந்த உப்பளங்களில் கடல் நீர் சூழ்ந்தது.
 தயார் நிலையில் இருந்த உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகின. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின்னர் உப்பு உற்பத்தி பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பருவ நிலைமாற்றம் காரணமாக கடல் நீர் உட்புகுந்து உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியது உப்பு உற்பத்தியாளர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story