பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி சுருட்டிய பெண் கைது
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி சுருட்டிய பெண் கைது செய்யப்பட்டார். அவர் பள்ளிக்கல்வித்துறையில் வேலை தருவதாக கூறி 100 பேரிடம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் “சென்னை பள்ளிக்கல்வித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் ரூ.3 கோடி வரை பணம் வசூலித்து ஒரு கும்பல் மோசடி செய்துவிட்டது. வேலைக்காக போலியான பணி நியமன ஆணைகளையும் அந்த கும்பல் வழங்கியது. நானும் அந்த கும்பலிடம் பணத்தை இழந்தேன். அந்த மோசடி கும்பல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்” என கூறியிருந்தார்.
பள்ளிக்கல்வி துறை போலி அதிகாரி
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலாராணி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த ரேணுகா (வயது 48) என்ற பெண், பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து, இந்த மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
மேலும் சைதாப்பேட்டையை சேர்ந்த காந்தி (54), நெற்குன்றத்தைச்சேர்ந்த மோகன்ராஜ் (32), தேனியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்து வந்ததும் தெரியவந்தது.
100 பேரிடம் பண மோசடி
இதையடுத்து, போலி கல்வித்துறை அதிகாரி ரேணுகா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி கும்பல் போலியான அரசு வேலை பணி நியமன ஆணைகளை வழங்கி தமிழகம் முழுவதும் சுமார் 100 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் அவர்கள் தங்களிடம் ஏமாந்த இளைஞர்களிடம் இருந்து அவர்களது அசல் கல்வி சான்றிதழ்களையும் பெற்றதும், இளைஞர்களை நம்பவைக்க சில இளைஞர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து நாடகமாடியதும் தெரியவந்தது.
கார், சொத்துகள் பறிமுதல்
கைதான மோசடி கும்பலிடம் இருந்து போலியான பணி நியமன ஆணை நகல்கள், இளைஞர்களிடம் வாங்கிய அசல் கல்வி சான்றிதழ்கள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மோசடி பணத்தில் வாங்கிய ரூ.40 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், செங்கல் சூளையில் ரூ.23 லட்சம் முதலீடு செய்த ஆவணங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர்
கைதான ரேணுகா கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். பிளஸ்-2 வரை படித்துள்ளார். இவரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடிக்க வைத்து, இந்த மிகப்பெரிய மோசடி லீலைகளை அரங்கேற்ற மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி மோகன்ராஜ் ஆவார்.
இவர்தான், போலியான அடையாள அட்டை மற்றும் போலியான பணி நியமன ஆணைகளை தயாரித்துள்ளார்.
இந்த மோசடி கும்பல் பற்றி தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
போலி அதிகாரியான ரேணுகா, பல்வேறு அரசு அலுவலகங்களில் நேரடியாக சென்று அதிகாரி என்ற தோரணையில் வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story