கனமழை: மயிலாடுதுறையில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் விடுமுறை


கனமழை: மயிலாடுதுறையில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் விடுமுறை
x
தினத்தந்தி 7 March 2022 7:46 AM IST (Updated: 7 March 2022 7:46 AM IST)
t-max-icont-min-icon

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை,

சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்ககூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன், காரணமாக பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story