சென்னையில் ஒரு சவரன் ரூ 40 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது; ஒரே நாளில் சவரன் விலை ரூ. 680 உயர்ந்தது.
சென்னை,
தங்கம் விலை கடந்த 4 மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்வை சந்தித்தது. கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ரூ.38,384க்கும், 2ம் தேதி சவரன் ரூ.39,024க்கும், 3ம் தேதி சவரன் ரூ.38,912க்கும் விற்கப்பட்டது. 4ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.4,873க்கும், சவரன் ரூ.38,984க்கும் விற்கப்பட்டது. 5ம் தேதி ஒரு சவரன் ரூ.39,760க்கும் விற்கப்பட்டது
இந்த நிலையில் தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றதுடனே அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து சவரனுக்கு ரூ.680 விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 680 உயர்ந்து ரூ.40,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ 5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.80 காசு உயர்ந்து ரூ 75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த அதிரடி விலை ஏற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஷியா, உக்ரைன் இடையே தொடர்ந்து 12-வது நாளாக போர் நீடித்து வருகிறது. இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்துள்ளது. போர் தொடரும் பட்சத்தில் தங்கம் விலை இதே வேகத்தில் உயர்ந்து கொண்டு தான் இருக்கும் என நகை மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story