சென்னை விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த டெல்லி தொழிலதிபர்...!
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் பயணிகள் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் பயணிகள் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர் அப்போது டெல்லியை சேர்ந்த சுனில் என்ற தொழிலதிபர் இந்த விமானத்தில் ஜெய்பூா் செல்வதற்காக வந்திருந்தாா்.
அவருடைய கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் சோதனை செய்த போது அதனுள் குண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த கைப்பையை தனியே எடுத்து வைத்துவிட்டு தொழிலதிபரிடம் விசாரித்தனர்.
அப்போது சுனில் அந்த கைப்பையில் எதுவும் இல்லை என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கைப்பை திறந்து பார்த்தபோது அதனுள் வெடிக்கும் நிலையில் லைவ் துப்பாக்கி குண்டுகள் 2 இருந்ததை கண்டுப்பிடித்தனா்.
அது கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் 7.55 மிமீ ரக குண்டுகள். இதையடுத்து துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொழிலதிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவா் டெல்லியில் இருந்து 4ம் தேதி திருப்பதிக்கு சென்றதாகவும், இங்கே இருந்து தற்போது ஜெய்ப்பூர் செல்வதற்காக வந்திருப்பதாகவும் கூறினார்.
தன்னிடம் துப்பாக்கி லைசென்ஸ் மற்றும் ஆவணங்களும் வைத்திருப்பதாகவும், தனது பாதுகாவலர் கைப்பையை அவசரமாக எடுத்து வந்ததால், தவறுதலாக துப்பாக்கி குண்டுகள் வந்துவிட்டது என்று கூறினார். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய பயணத்தை ரத்து செய்தனர். அதோடு மேல் நடவடிக்கைக்காக அவரையும் துப்பாக்கி குண்டுகளையும் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி தொழிலதிபர் ஒருவரிடம் 15 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் டெல்லி தொழில் அதிபரிடமிருந்து மேலும் 2 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story