அரிசிக் கடையில் எஸ்.பி. சிஐடி என்று கூறி ரூ.3000 மோசடி செய்தவர் கைது..!


அரிசிக் கடையில் எஸ்.பி. சிஐடி என்று கூறி ரூ.3000 மோசடி செய்தவர் கைது..!
x
தினத்தந்தி 7 March 2022 10:34 PM IST (Updated: 7 March 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் உள்ள அரிசிக் கடையில் எஸ்.பி. சிஐடி என்று கூறி ரூ.3000 மோசடி செய்தவரை மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி நகராட்சி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி மார்க்கெட்டில் அரிசிக் கடை நடத்தி வருபவர் தங்கத் திருப்பதி (63). இன்று மாலை கடையில் இவரது மகன் கௌதம் (வயது 28) இருந்துள்ளார். அப்போது ஜீன்ஸ் பேண்ட், புளு கலர் டி சர்ட் அணிந்து ஒருவர் வந்துள்ளார். 

கடையிலிருந்த கௌதமிடம் தான் சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.பி. சிஐடி யாக இருக்கிறேன். ஒரு வேலையாகக் கோவில்பட்டிக்கு காரில் வந்தேன். தற்போது கார் பழுதாகி விட்டதால் அதைப் பழுது பார்க்க ரூ 3 ஆயிரம் தேவைப்படுகிறது.  நீங்கள் கொடுத்தால் உங்கள் கூகுள் பேயில் அனுப்புகிறேன் எனக் கூறி கௌதம் நம்பரை எழுதி வாங்கிக் கொண்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். வெளியே வந்ததும் கூகுள் பேயில் பணம் அனுப்ப எழுதி வாங்கிய சீட்டை கிழித்துப் போட்டுவிட்டு வேகமாக சென்றதை பார்த்த கௌதம் கூச்சல் போட்டுள்ளார். 

உடனே அருகிலிருந்த கடைக்காரர்கள், பொது மக்கள் மோசடி ஆசாமியைப் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த சப்- இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மோசடி ஆசாமியைப் பிடித்து விசாரித்தார். விசாரணையில், பிடிபட்ட ஆசாமி சிவகங்கை மாவட்டம், இளையான் குடியைச் சேர்ந்த சந்திரன் மகன் தட்சணாமூர்த்தி (47) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ 3 ஆயிரத்தைக் கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து, இது போல வேறு யாரையும் ஏமாற்றியுள்ளரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story