உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை மாணவர்..!
கோவையைச் சேர்ந்த மாணவர் உக்ரைன் துணை ராணுவப்படையில் இணைந்துள்ளார்.
சென்னை,
கோவையைச் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ், கார்கோ நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் போர் சூழலில் உக்ரைனின் ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை இராணுவ பிரிவில் இணைந்துள்ளார்.
சாய்நிகேஷ் ராணுவத்தில் இணைந்தது இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்தது. இந்திய இராணுவத்தில் சேர வேண்டுமெனச் சாய் நிகேஷ் சிறு வயது முதலே விரும்பி உள்ளார். ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய இராணுவத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
உக்ரைன் போர் காரணமாகத் துணை இராணுவ படையில் சேர சாய்நிகேஷ்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வரும் சூழலில், சாய்நிகேஷ் உக்ரைனுக்கு ஆதரவாகப் போர் புரிந்து வருகிறார்.
இந்த விவகாரம் குறித்து போலீசார் சாய்நிகேஷ் பெற்றோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story