நெல்லை: தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டி கேட்ட லாரி டிரைவர் அடித்து கொலை..!


நெல்லை: தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டி கேட்ட லாரி டிரைவர் அடித்து கொலை..!
x
தினத்தந்தி 8 March 2022 11:14 AM IST (Updated: 8 March 2022 11:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டி கேட்ட லாரி டிரைவர் அடித்துக் கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர், மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 33) லாரி டிரைவராக உள்ளார். இவர் நேற்று இரவு பெட்ரோல் போடுவதற்காக பணகுடி ஊருக்குள் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுத் தாக்கிக் கொண்டிருந்தனர். 

இதனை அங்கு வந்த கலைச்செல்வன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கலைச்செல்வனைத் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் கலைச்செல்வனை மீட்டு பணகுடி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தகராறில் ஈடுபட்டு கலைச்செல்வனைக் கொலை செய்த பணகுடி கோரி காலணியைச் சேர்ந்த மணீஷ் ராஜா, ஆட்டோ குமார், பாலசுப்பரமணியன், சிவா ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மாணிக்கராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து பணகுடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story