பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - மாவட்ட, முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்பு
சென்னை கோட்டூர்புரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை முற்றிலுமாக தடுப்பது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த முதற்கட்ட திருப்புதல் தேர்வுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story