மாநில கல்விக் கொள்கை - புதிய குழு அமைப்பு
புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க புதிய குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்படவுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்,உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் உயர்கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றார்.
Related Tags :
Next Story