காரைக்கால்: 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது..!


காரைக்கால்: 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது..!
x
தினத்தந்தி 8 March 2022 3:49 PM IST (Updated: 8 March 2022 3:49 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் அருகே 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வி.எஸ் நகரைச்சேர்ந்தவர் குரு பிரசாத் (வயது21). கூலி வேலை செய்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை, ஆசைவார்த்தைகள் கூறி தனியாக அழைத்து சென்றுள்ளார். ஆள் இல்லாத இடத்திற்க்கு சிறுவனை அழைத்துச் சென்ற வாலிபர் அங்கு வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திரு.பட்டினம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் குரு பிரசாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

Next Story