அம்மன் வேடத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ


அம்மன் வேடத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 8 March 2022 7:32 PM IST (Updated: 8 March 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

அம்மன் வேடத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா தோன்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுச்சேரி
அம்மன் வேடத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா தோன்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடன வீடியோ

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் ஆவார்.
இவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது குறும்படம் ஒன்றில் ஆசிரியையாக நடித்து புகழ் பெற்றார். அதன்பின் சமீபத்தில் திருச்சியில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இவர் நடனமாடிய வீடியோ வைரலாக பரவியது.

அம்மன் வேடத்தில்...

இந்தநிலையில் மகளிர் தினத்தையொட்டி சந்திரபிரியங்கா அம்மனாக தோன்றும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கணவர் சண்முகத்துடன் பூஜையில் கலந்துகொள்ளும் இவர் அம்மனாக தோன்றுகிறார்.
அவருக்கு அம்மன்வேடம் அணிவிப்பது, பூஜை செய்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மேலும் அதன் பின்னணியில் ஆன்மிகம் முதல் அறிவியல் வரை தடம் பதிக்கும் இடமெல்லாம் தரணி போன்று வாழ்பவள் பெண். பெண் என்பவள் பிரம்மசக்தி என்று தொடங்கி பெண்ணின் பெருமையை பறைசாற்றும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இறுதியில் அனுதினமும் நம்மை காத்திடும் பெண்களை சர்வதேச மகளிர் தின நாளில் போற்றி வணங்குவோம் என்று முடிகிறது. சுமார் ஒரு நிமிடம் 20 நொடிகள் அந்த வீடியோ ஓடுகிறது.
இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரவேற்பை பெற்று வருகிறது.

Next Story