பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
சென்னை,
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான புதியதோர் முன்னெடுப்பாக ‘நான் முதல்வன்' என்ற திட்டத்தினை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 1-ந் தேதி அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக தமிழக இளைஞர்களின் உயர்கல்வியை வலுப்படுத்துவதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லீஸ் முன்னிலையிலும் நேற்று நடந்தது. இதன் மூலம் தமிழக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி நேர்முக தேர்வுகளுக்கு இளைஞர்கள் தங்களை எவ்வாறு ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், தங்களின் தனித்திறன்களை எவ்வாறு மெருகேற்றுவது என்றும் இதில் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
பிரத்தியேக பாடத்திட்டம்
அறிவுசார் இலக்கு மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை பெறும் வகையில், இளைஞர் சமுதாயத்துக்கு திறன் பயிற்சி அளித்து உலகமெங்கும் தடையின்றி செல்ல ஆங்கில மொழியினை கற்றறியவும், கல்வி மற்றும் கலாசாரத்தை ஒருங்கிணைந்து வலுப்படுத்திடவும் இந்த புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு பயிற்சி தரமான கல்வி மற்றும் சர்வதேச தரத்திலான மதிப்பீடுகளை இளைய சமுதாயத்துக்கு அளித்திட வழிவகுக்கும்.
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரத்தியேக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு பயிற்சியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இப்பயிற்சி தமிழக இளைஞர்களின் பல்வகையான திறன்களை மேலும் மெருகேற்ற வழிவகை செய்யப்படும். மேலும் இளைஞர்களின் உயர்கல்வி, திறன் மேம்பாடு, கலை மற்றும் பண்பாடு ஆகியவையும் வலுப்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர்.கிர்லோஷ்குமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் ஜெ.இன்னசன்ட் திவ்யா உள்பட அதிகாரிகள், பிரிட்டிஷ் தூதரக உயர் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story