திம்பம் மலைப்பாதையில் ஆளில்லா விமானம் மூலம் தேசிய நெஞ்சாலைத்துறையினர் ஆய்வு
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி தேசிய நெஞ்சாலைத்துறைனர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இருமாநில போக்குவரத்தும் பல மணி நேரம் பாதிக்கப்படுகிறது.
இதனிடையே கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்த சாலையில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து பாதிப்புக்கு தீர்வு காணும் முயற்சியாக தேசிய நெஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆளில்லா விமானம் மூலம் திம்பம் மலைப்பாதையில் ஆய்வு செய்தனர்.
பன்னாரி அம்மன் கோவில் முதல் திம்பம் மலை உச்சி வரை மலைப்பாதையில் சுமார் 13 கி.மீ. தூரத்திற்கு ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாலை விரிவாக்கம், மாற்று வழி போக்குவரத்து உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story