ராமநாதபுரம்: கிப்ட் பார்சல் தகவலை நம்பி ரூ. 2.84 லட்சம் இழப்பு..! மோசடி கும்பல் கைவரிசை..!


ராமநாதபுரம்: கிப்ட் பார்சல் தகவலை நம்பி ரூ. 2.84 லட்சம் இழப்பு..! மோசடி கும்பல் கைவரிசை..!
x
தினத்தந்தி 9 March 2022 11:45 AM IST (Updated: 9 March 2022 11:44 AM IST)
t-max-icont-min-icon

விலையுயர்ந்த கிப்ட் பார்சல் அனுப்புவதாக கூறி ரூ.2.84 லட்சம் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் புதுத்தெருவை சேர்ந்தவர் தக்வீத் (32). இவர் முகநூல் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஸ்ரீபன் ஹென்றி என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். நண்பராக பழகிய நிலையில் தக்வீத்திற்கு உதவி செய்வதாக கூறி கிப்ட் பார்சல் அனுப்புவதாக தெரிவித்துள்ளார். 

கிப்ட் பார்சல்:-

பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அடையாளம் தெரியாத பெண் தக்வீத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டு கஸ்டம்ஸ் அலுவலகம், நியூடெல்லியில் இருந்து பேசுவதாக தெரிவித்து கிப்ட் பார்சல் வந்துள்ளதாகவும், ஆனால் வரி ரூ.20 ஆயிரம் செலுத்தாமல் இருப்பதாகவும், அந்த பணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளார். அதை நம்பி ரூ.20,000 அனுப்பியுள்ளார். மீண்டும் அந்த பெண் தொடர்பு கொண்டு உள்நாட்டு வரியாக ரூ.18 ஆயிரம் கேட்டவுடன் பணம் ரூ.18 ஆயிரம் செலுத்தியுள்ளார். 

அதன் பின் பார்சல் வரும் என காத்திருந்த போது அந்த பெண் தொடர்பு கொண்டு பார்சலில் விலை மதிப்புள்ள பொருள் இருப்பதாக கூறி கூடுதலாக ஒரு இலட்சம் கேட்டதாகவும், செலுத்தாவிட்டால் பார்சலை திருப்ப அனுப்பிவிடுவதாக கூறியதால், தத்வீக் ரூ.75,900 செலுத்தியுள்ளார். மீண்டும் அந்த பெண் தொடர்பு கொண்டு இந்திய வரி உயர்த்தி விட்டதாக கூறி ஒரு லட்சம் கேட்டதாகவும், அதற்கு தத்வீக் ரூ.80,000 செலுத்தியுள்ளார். பின் லண்டனில் இருந்து வந்த பார்சல் வைத்திருந்த அறை மற்றும் பாதுகாவலர்களின் சம்பளம், விமான டிக்கெட் செலவு சேர்த்து ரூபாய் லட்சம் கேட்டதாகவும், அதற்கு ரூ.90,000 செலுத்தியுள்ளார். 

போலீசில் புகார்:-

அதன் பின்பும் கிப்ட் பார்சல் வராததால் மொத்தமாக ரூ.2,83,900 ஏமாற்றப்பட்டதை அறிந்து ஏமாற்றிய நபரின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தான் இழந்த பணத்தினை மீட்டுத்தருமாறு ராமநாதபுரம் சைபர் கிரைமில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மோசடி நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story