தமிழக பெண்களுக்கு ‘மகளிர் ஆற்றல்’ விருது - மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தமிழக பெண்களுக்கு ‘மகளிர் ஆற்றல்’ விருது - மு.க.ஸ்டாலின்  வாழ்த்து
x
தினத்தந்தி 9 March 2022 1:29 PM IST (Updated: 9 March 2022 1:29 PM IST)
t-max-icont-min-icon

2020ம் ஆண்டுக்கான ’மகளிர் ஆற்றல்’ விருதை பெற்றுள்ள நீலகிரி கைவினைக்கலைஞர் ஜெயா முத்து, கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான “மகளிர் சக்தி விருது”களை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் சிறந்த சாதனைகளை புரிந்த 29 பெண்களுக்கு (ஆண்டுக்கு 14 விருதுகள் வீதம்) 28 விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் ஜெயா முத்து மற்றும் தேஜம்மாள் ஆகிய இருவரும் 2020-ம் ஆண்டின் ஒரு விருதுக்கு தகுதி பெற்று இருந்தனர். சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா ரங்கசாமி 2021- ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதி பெற்று இருந்தார். 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் கொரோனா தொற்று காரணமாக வழங்கப்படாமல் தற்போது வழங்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,

2020-ஆம் ஆண்டுக்கான "மகளிர் ஆற்றல்" விருதினைப் பெற்றுள்ள நீலகிரியைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து மற்றும் கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா, 2021-ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்ற மனநல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான தாரா ரங்கசாமி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். 

Next Story