அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி; அதிமுக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் கைது...!


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி; அதிமுக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் கைது...!
x
தினத்தந்தி 9 March 2022 4:00 PM IST (Updated: 9 March 2022 4:03 PM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக 15 பேரிடம் ஒரு கோடியே 25 லட்சம் மோசடி செய்த அதிமுக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்  அருகே உள்ள தத்தலூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி சம்பத் (வயது 69).  இவர் கடந்த 3-ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். 

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

திருக்கழுக்குன்றம் அருகே உள்ள தத்தலூரை சேர்ந்த சம்பத். இவரது மகன் செல்வம் எம்.எஸ்.சி படித்து உள்ளார். செல்வம் கடந்த 2015-ஆம் ஆண்டு வேலை தேடி வந்த நிலையில் திருக்கழுக்குன்றம் கொத்திமங்கம் ஊராட்சி மன்றத்தின் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தமனின் அறிமுகம் கிடைத்து உள்ளது

அப்போது புருஷோத்தமன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் தனது நண்பருடன் சேர்ந்து 15க்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்க வேலை வாங்கி தந்ததுள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இதே போன்று செல்வத்திற்கு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள லேப் அசிஸ்டென்ட் பணியை வாங்கி தருவதாக  புருஷோத்தமன்  தெரிவித்து உள்ளார்

இதனை உண்மை என்று நம்பிய சம்பத்  ரூ. 6 லட்சத்தை முன் பணமாக கொடுத்து உள்ளார். ஆனால் வேலை வாங்கி தரமாகல்  புருஷோத்தமன் காலம் தாழ்த்தி வந்து உள்ளார்.

இது தொடர்பாக சம்பத் கொடுத்து புகாரின் அடைப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்து விசாரணை நடத்திவந்தனர். 

அப்போது 15-க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான பணத்தை மோசடி செய்தது தெரியவந்து உள்ளது.

தற்போது அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

Next Story