சீர்திருத்த திருமணம் இந்தியா முழுவதும் சட்டமாக வேண்டும்: முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின்


சீர்திருத்த திருமணம் இந்தியா முழுவதும் சட்டமாக வேண்டும்: முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 9 March 2022 5:03 PM IST (Updated: 9 March 2022 5:03 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சீர்த்திருத்த திருமணம் சட்டமாக இருப்பது போல் இந்தியாவில் சட்டமாக வர நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

அமைச்சர் தங்கம் தென்னரசு சகோதரியும், தென்சென்னை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் ஐ.ஜி. சந்திரசேகர் ஆகியோரது மகள் டாக்டர் நித்திலாவுக்கும், பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் டாக்டர் ஆர்.மகேந்திரன் மகன் டாக்டர் கீர்த்தன் மகேந்திரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் இன்று காலை திருவான்மியூரில் நடந்தது. திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

பின்னர் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசுகையில், 

இன்றைக்கு நடைபெற்றிருக்கிற சீர்திருத்த திருமணம். இது திராவிட திருமணம் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் திராவிட மாடலில் நம்முடைய ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. 

ஆகவே இந்த சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடி ஆக வேண்டும் என்று முதன் முதலில் தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா தலைமையில் 1967-ல் ஆட்சிக்கு வந்த உடனே சட்டமன்றத்தில் முதல் தீர்மானமாக அண்ணா இந்த தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆக அந்த தீர்மானம் இன்றைக்கு மக்களிடத்தில் பரவலாகி விரிவாகி பிரபலமாகி இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதைத்தான் கலைஞரும் சொன்னார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் இந்த சட்டம் கொண்டுவர வேண்டும் என நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே இங்கே இருக்கக் கூடிய எம்.பி.க்களை கேட்டுக்கொள்ள விரும்புவது, எப்படி தமிழகத்திலே இந்த சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகும் என்ற நிலை இருக்கிறதோ அதேபோல் இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை கொண்டுவர பாராளுமன்றத்தில் தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்ற அந்த சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும்” என்றார். 


Next Story