நெல்லையை சேர்ந்த 21 மாணவ-மாணவிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர்...!


நெல்லையை சேர்ந்த 21 மாணவ-மாணவிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர்...!
x
தினத்தந்தி 9 March 2022 7:45 PM IST (Updated: 9 March 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையை சேர்ந்த 21 மாணவ-மாணவிகள் ஜேஇஇ நுழைவு தேர்வு பயிற்சிக்காக விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர்.

சென்னை,

நெல்லை மாவட்டத்தின் கல்லணை, சேரன்மாதேவி, முனஞ்சிப்படி, களக்காடு, எர்வாடி உள்பட பல கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும்  21 மாணவ - மாணவிகள் ஐ.ஐ.டி. மற்றும் ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
 
இந்த மாணவர்கள் சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றை பார்வையிட நெல்லை கலெக்டர் விஷ்ணு நடவடிக்கை மேற்கொண்டார். இந்த முயற்சியின் பயனாக  21 மாணவர்கள் ஆசிரியர்களுடன் 2 நாள் பயணமாக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இது தொடர்பாக ஆசிரியர் பிரபு ரஞ்சித் எடியன் கூறுகையில், 

நெல்லையில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவ- மாணவிகள் நெல்லை மாவட்ட கலெக்டரின் முயற்சியால் சென்னை வந்து உள்ளனர். 

ஜே.இ.இ. நுழைவு தேர்வு எழுத கிராமப்புறங்களில் இருந்து 13 மாணவிகளும் 8 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டியில் சுற்றி பார்த்து போட்டி தேர்வில் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என கூறினார்.

இது தொடர்பாக பள்ளி மாணவர் சுந்தர் ராஜேஷ் கூறுகையில், 

மாவட்டட கலெக்டர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதன் முறையாக விமானத்தில் வருகிறேன். விமானத்தில் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை ஐ.ஐ.டியில் ஒரு மாணவனாக இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

இது தொடர்பாக மாணவி செல்வநாயகி கூறுகையில், 

சென்னை ஐ.ஐ.டியை பார்வையிட உள்ளோம். ஜே.இ.இ. தேர்வுக்காக பயிற்சி எடுக்க வந்து உள்ளோம். அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டர் எடுத்த முயற்சியால் பயிற்சி எடுத்து வருகிறோம். முதன் முறையாக எங்களை விமானத்தில் அழைத்து வந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.



Next Story