அனைவருக்கும் கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றிகள் - அற்புதம் அம்மாள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார். பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்ததற்கு அவரது தாயார் அற்புதம் அம்மாள் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“அறிவின் 31 ஆண்டு சிறை, நன்னடத்தை, சிறையில் பெற்ற கல்வி, உடல்நிலை ஆகியன கருதி பிணை வழங்கப்பட்டுள்ளது.
துணை நின்ற மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதி , மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் உள்ளிட்ட அனைவருக்கும் கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story