நான்கு வழிச்சாலைக்காக மதகடிப்பட்டு முத்தமிழ் நுழைவாயில் காமராஜர் நினைவு தூண் அகற்றம்
நான்கு வழிச்சாலைக்காக மதகடிப்பட்டில் முத்தமிழ் நுழைவாயில், காமராஜர் நினைவு தூண் அகற்றப்பட்டது.
திருபுவனை
நான்கு வழிச்சாலைக்காக மதகடிப்பட்டில் முத்தமிழ் நுழைவாயில், காமராஜர் நினைவு தூண் அகற்றப்பட்டது.
நான்கு வழிச்சாலை
புதுச்சேரி பிரதேச எல்லையான முள்ளோடை, கோரிமேடு, மதகடிப்பட்டில் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு நுழைவாயில் அமைக்கப்பட்டது. இந்த நுழைவாயில்கள் புதுச்சேரியின் நினைவு சின்னமாக உள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலைக்காக புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில், திருபுவனை பகுதியில் சாலைகள் அகலப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக சாலையோரம் இருந்த மரங்கள், கட்டிடங்கள் அகற்றப்பட்டு, தற்போது அங்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முத்தமிழ் வாயில்
இந்த நிலையில் மதகடிப்பட்டு எல்லை உள்ள முத்தமிழ் நுழைவாயிலை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி முத்தமிழ் நுழைவாயில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டன. அங்கிருந்த தமிழ்த்தாய் சிலை பத்திரமாக எடுக்கப்பட்டன. அந்த சிலையை பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இதேபோல மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் இருந்த காமராஜர் நினைவு தூண் வளைவும் அகற்றப்பட்டது. ராட்சத எந்திரங்கள் மூலம் ஒருசில மணிநேரத்தில் இது முற்றிலுமாக அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story