தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில்கள் இடையே அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை,
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கும், ஆயத்த ஆடை மற்றும் வீட்டு அலங்காரம், அழகு மற்றும் நலம், வீட்டு பணியாளர்கள், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், உணவு பதனிடுதல், நகைகள் மற்றும் கற்கள், பசுமை பணிகள், தோல் பதனிடுதல், மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர், ரப்பர், தொலைதொடர்பு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய 12 துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில்களுக்கும் இடையே தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதன்மூலம், அந்தந்த துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில் வாயிலாக அளிக்கப்படும் வேலைவாய்ப்பை பெறும் வகையிலான குறுகிய கால பயிற்சிகள், பயிற்றுனர்களுக்கான பயிற்சி, மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி ஆகியவை மேற்கொள்ளப்படும். மேலும் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில்கள் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிதாக எழக்கூடிய பயிற்சிகள், வேலைகள் குறித்த தகவல்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் பகிர்ந்துகொள்ளும்.
திறன் மையமாக...
துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில்களின் வாயிலாக வழங்கக்கூடிய பயிற்சிகளுக்கான செலவினத்தை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஏற்கும். அதுமட்டுமின்றி உலகத்திறன் போட்டிகளில் தமிழக திறன் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வெல்ல தேவையான பயிற்சிகளை அளித்து, அந்த போட்டிகளுக்கு ஆயத்தமாக வழிவகுக்கும். இந்த ஒப்பந்தம் தமிழகத்தை நாட்டின் திறன் மையமாக மாற்றியமைப்பதின் ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.
நிகழ்ச்சியின்போது துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில்களின் முதன்மை செயல் அதிகாரிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கிர்லோஷ் குமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மேலாண்மை இயக்குனர் இன்னசன்ட் திவ்யா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story