ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கைவரிசை: வீட்டை வாடகைக்கு எடுத்து நூதன மோசடி பா ஜ க பிரமுகர் உள்பட 2 பேர் கைது
ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டை வாடகைக்கு எடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டை வாடகைக்கு எடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்
புதுவை ரெட்டியார்பாளையம் ஜவகர் நகர் 5-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது 62). ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர், தனது வீட்டின் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ் தளம் வாடகைக்கு விடப்படும் என அறிவிப்பு பலகை வைத்திருந்தார்.
இந்தநிலையில் அவரது வீட்டின் கீழ் தளத்தை புதுச்சேரியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பிரைசூடன், லாஸ்பேட்டையை சேர்ந்த மோகன் என்கிற மோகன்ராஜ், இவரது தாயார் புவனா ஆகியோர் வாடகைக்கு கேட்டனர். அவர்களுக்கு தங்கமணி வீட்டை வாடகைக்கு கொடுத்தார்.
2 பேர் கைது
இதற்கிடையே பிரைசூடன், மோகன், புவனா ஆகியோர் அந்த வீட்டை தீர்த்தராமன் என்பவருக்கு பணத்தை பெற்றுக்கொண்டு போகியத்திற்கு கொடுத்தாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தங்கமணி, தீர்த்தராமனை வீட்டை காலி செய்யும் படி கூறினார். ஆனால் அவர் வீட்டை காலி செய்ய மறுத்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசில் தங்கமணி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பிரைசூடன், மோகன், தீர்த்தராமன், புவனா ஆகியோர் மீது மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பிரைசூடன், மோகன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தீர்த்தராமன், புவனா ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story