அமெரிக்காவில் உள்ள தமிழக சிலைகளை மீட்க சி.பி.ஐ.யில் தனிக்குழுவை அமைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி
அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள தமிழக சிலைகளை மீட்க சி.பி.ஐ. இணை இயக்குனர் தலைமையில் தனிக்குழுவை அமைக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘அமெரிக்காவுக்கு நான் கடந்த 2019-ம் ஆண்டு சென்றபோது வாஷிங்டன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர், ஐந்துமுக ருத்ராட்சம் உள்ளிட்ட புராதன சிலைகள், பொருட்கள் இருப்பதைப் பார்த்தேன்.
அவை எல்லாம் நம் நாட்டில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டவை. இதுசம்பந்தமாக சி.பி.ஐ. விசாரித்து சிலைகளை மீட்கும் வகையில், சி.பி.ஐ. இணை இயக்குனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் தனிக் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
தகவல் மறைப்பு
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து மனுதாரர்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்து, சிறப்பு அதிகாரியை நியமனம் செய்தது. அந்த நியமனத்தை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. அத்தகவல்களை மனுதாரர் மறைத்து, இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கு என்று தனியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உள்ளனர்’ என்று வாதிட்டார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story