பேரறிவாளன் ஜாமீனில் விடுதலையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அன்புமணி ராமதாஸ் அறிக்கை
‘பேரறிவாளன் ஜாமீனில் விடுதலையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றும், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது’ என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருக்கிறது. மிக நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்துக்கு பிறகு பேரறிவாளன் ஜாமீனில் விடுதலையாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்பு பாராட்டத்தக்கது.
பேரறிவாளனின் சட்டப்பூர்வ விடுதலை 2014-ம் ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, மாநில அரசு விரும்பினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யலாம் என்று கூறியிருந்தது.
அதன்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய அப்போதைய அரசு முடிவு செய்தபோது, அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்போதைய மத்திய அரசு வழக்கு தொடர்ந்ததால் தான் பேரறிவாளனின் விடுதலை 10 ஆண்டுகளாக தாமதம் ஆகிறது.
கவர்னருக்கு வலியுறுத்தல்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என 4 ஆண்டுகளுக்கு முன்பே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த பின்னரும், ஜனாதிபதிக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்துவதே பேரறிவாளனின் நிரந்தர விடுதலைக்கு தடையாக உள்ளது. ஆனால் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு என்பதை தற்போதைய விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவதற்கு ஆயிரமாயிரம் நியாயங்கள் உள்ளன. அவை அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ஆய்வு செய்து நல்ல தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை பா.ம.க.வுக்கு உண்டு. அடுத்த சில வாரங்களில் பேரறிவாளனும், அவரைத் தொடர்ந்து பிற தமிழர்களும் நிரந்தரமாக விடுதலை ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்பாகவே, 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, அவர்களை விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story