பண்ணாரி அம்மன் உலா பெண் பக்தர்கள் சப்பரம் முன்பு படுத்து நேர்த்திக்கடன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் உலா புது ஊருக்கு வந்தபோது பெண் பக்தர்கள் குப்புறப் படுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி அம்மன் கோயில். இந்த கோவிலில் வருடம் தோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த 8ஆம் தேதி அதிகாலை பூச்சாட்டு விழா வெகு விமரிசையாக விழா தொடங்கியது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து பண்ணாரியம்மன் உலா நிகழ்ச்சி கடந்த 8ஆம் தேதி இரவு அம்மன் உலா சிக்கரசம்பாளையம் அம்மன் கோவிலில் தொங்கியது.
9ஆம் தேதி சிக்கரசம்பாளையம் உலா நடைபெற்றது. இரவு புதூர் சென்றது புதூரில் உள்ள அம்மன் கோவில் சப்பரம் தங்க வைக்கப்பட்டது. இன்று 10ஆம் தேதி காலை 7 மணிக்கு புதூரில் வீதியுலா நடைபெற்றது. அப்போது வழிநெடுக பக்தர்கள் விவசாயிகள் ஏராளமான தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செய்தார்கள்.
அதன் பிறகு அம்மன் சப்பரம் காலனிக்கு உலா வந்தபோது, அந்த காலனியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ரோட்டில் தங்கள் நேர்த்திக் கடனுக்காக குப்புறப் படுத்துக் கொண்டார்கள். சப்பரம் எடுத்து வந்தவர்கள் பெண்களை தாண்டித் தாண்டி சென்றார்கள். உலா முடிந்து வெள்ளியம்பாளையத்திற்கு சப்பரம் சென்றது. வரும் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விழாவின் முக்கியத்துவம் வாய்ந்த குண்டம் திருவிழா அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள்.
Related Tags :
Next Story