சாலை விபத்தில் உயிரிழந்த எம்.பியின் மகன் உடலுக்கு முதல்-அமைச்சர் அஞ்சலி
சாலை விபத்தில் உயிரிழந்த எம்.பி. என்.ஆர்.இளங்கோவின் மகன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
தி.மு.க மாநிலங்களவை எம்.பி. என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
அங்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.பி மகன் ராகேஷ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் என்.ஆர்.இளங்கோவுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
இதே போன்று தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.யும் ராகேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Related Tags :
Next Story