மீன்பிடி துறைமுகத்தில் நின்ற லாரி திருட்டு...!
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நின்ற லாரியை மர்மநபர்கள் திருடி உள்ளனர்.
காரைக்கால்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஜான்பாண்டின். இவர் பிரபாகரன் என்பவரது லாரியில் மீன் ஏற்றுவதற்காக காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 7-ந் தேதி சென்று உள்ளார்.
அங்கு வந்த ஜான்பாண்டியன் துறைமுகத்தில் மீன் ஏற்றுவதற்காக லாாியை நிறுத்தி உள்ளார். அப்போது லாரியில் மீன் ஏற்றுவதற்கு தாமதமாகி உள்ளது. இதனால் ஜான்பாண்டியன் லாரியை அங்கு விட்டுவிட்டு நாகை மாவட்ட லாரி அலுவலகத்திற்கு சென்யிருக்கிறார்.
பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான்பாண்டியன் பல இடங்களில் தேடி பார்த்து உள்ளார். ஆனால் லாரி கிடைக்கவில்லை. இதனால் ஜான்பாண்டியன் நிரவி போலீஸ் நிலையத்தில் லாரி திருடப்பட்டது தொடர்பாக புகார் அளித்து உள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story