தண்டனை வழங்கப்பட்ட ஆசிரியருக்கு பதவி உயர்வு:வட்டார கல்வி அலுவலர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்


தண்டனை வழங்கப்பட்ட ஆசிரியருக்கு பதவி உயர்வு:வட்டார கல்வி அலுவலர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 10 March 2022 11:55 PM IST (Updated: 10 March 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

தண்டனை வழங்கப்பட்ட ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்கிய வட்டார கல்வி அலுவலர்கள் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கரூர், 
பதவி உயர்வு
கரூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தண்டனை வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
4 பேர் பணியிடை நீக்கம்
இதனைதொடர்ந்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள்  மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இதன்பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு திரும்ப பெறப்பட்டு வேறு ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், தண்டனை வழங்கப்பட்ட ஆசிரியருக்கு முறைகேடாக பதவி உயர்வு வழங்கிய கடவூர் வட்டார கல்வி அலுவலர்கள் (பொறுப்பு) செந்தில்குமாரி, ராஜலட்சுமி மற்றும் கடவூர் வட்டார கல்வி அலுவலக ஊழியர் ஜான்சி, குளித்தலை மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் குணசேகரன் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Next Story