விலை ரூ.2க்கு வீழ்ச்சி; வேதனையில் தக்காளியை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்
திண்டுக்கல்லில் தக்காளி ரூ.2க்கு விற்பனையான நிலையில், வேதனையில் அவற்றை விவசாயிகள் சாலையில் கொட்டி விட்டு சென்றுள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தக்காளி பெட்டிகள் வரத்து அதிகரித்து உள்ளன. எனினும், இதனை வாங்க, வர்த்தகர்களோ அல்லது மக்களோ கூட போதிய ஆர்வம் காட்டவில்லை. தக்காளி அதிகளவில் வந்து குவிந்துள்ள நிலையில், அதன் விலை வீழ்த்தி அடைந்து உள்ளது விவசாயிகள் இடையே வேதனை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு கிலோ தக்காளி ரூ.2க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. விலை வீழ்ச்சி, நஷ்டம் ஏற்படுத்திய வேதனையில், விவசாயிகள் தங்களுடன் கொண்டு வந்த தக்காளி பெட்டிகளில் இருந்து அவற்றை சாலையில் கொட்டி விட்டு சென்றுள்ளனர். தக்காளி விளைச்சல் அமோக அளவில் இருந்தபோதும், அதற்கான விற்பனை விலை குறைவாக இருப்பது அவற்றை பயிர் செய்தவர்களுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனால், தக்காளிகளை அரசே கொள்முதல் செய்து வேறு வகைகளில் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தக்காளியை குவியல் குவியலாக ரோட்டில் கொட்டிய விவசாயிகள்#Oddanchatram | #Tomatohttps://t.co/B95H9uL9F0
— Thanthi TV (@ThanthiTV) March 11, 2022
Related Tags :
Next Story